ஐரோப்பாவில் சதுரங்க போட்டி: மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 மே
2019
07:41
பதிவு செய்த நாள்
மே 20,2019 07:40

புதுக்கோட்டை: புதுக்கோட்டையை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவர் ஒருவர், ஐரோப்பாவில் நடைபெறும், உலக மாற்று திறனாளிகளுக்கான, வீல்சேர்சதுரங்க போட்டியில்பங்கேற்க, நிதி வசதியின்றி தவித்து வருகிறார்.


புதுக்கோட்டையை சேர்ந்த, அடைக்கலவன் என்பவரது மகன் அங்கப்பன், 22. பிறவியிலிருந்தே இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் செயல்படாத தால், வீல் சேர் உதவி யுடன் செயல்பட்டு வந்தார். மிகுந்த சவாலுக்கிடையே, திருச்சியில் உள்ள இன்ஸ்டிடியூட்டில், சி.ஏ., படித்து வருகிறார்.தந்தை உதவியுடன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வரும் அங்கப்பன், எட்டு ஆண்டுகளாக, பயிற்சியாளர் முகமதுஅலி ஜின்னா என்பவரிடம்,சதுரங்கத்தில் பயிற்சி பெற்று, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்று, சாதனை புரிந்து வருகிறார்.ஜூன், 26ல், ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவாக்கியாவில் நடைபெறும், உலக அளவிலான மாற்று திறனாளிகள் சதுரங்க போட்டி வீல்சேர் பிரிவில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார். இந்தியாவிலிருந்து, ஐந்து பேர் பங்கேற்கும் போட்டியில், திருச்சியை சேர்ந்த, ஜெனிதா, புதுக்கோட்டையை சேர்ந்த, அங்கப்பன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். திருச்சியை சேர்ந்த ஜெனிதா முதலிடம் பெற்று தேர்வானதால், அவரை மட்டும் அரசு சார்பில் அழைத்துச் செல்ல உள்ளனர். ஆண்களுக்கான வீல்சேர் பிரிவில், மூன்றாம் இடம் பிடித்து, தகுதி பெற்றுள்ள அங்கப்பன், சொந்த செலவில் சென்று வரவேண்டி உள்ளது. இதனால், போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றும் நிதி வசதி இல்லாமல் அங்கப்பன் தவித்து வருகிறார்.


இது குறித்து, அங்கப்பன் கூறியதாவது: ஏற்கனவே, பலமுறை மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தும், பொருளாதார வசதிஇல்லாததால், பங்கேற்க முடியவில்லை. தற்போது, இந்தியாவுக்காக, விளையாட வாய்ப்பு கிடைத்து உள்ளது.இதில், வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். ஆனால், ஐரோப்பாவுக்கு செல்ல அதிக செலவாகும். அரசு உதவினால் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். அங்கப்பன் தொடர்புக்கு: 8608036535.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X