| ஞானபுரீ மங்கள மாருதி கோவிலுக்கு கிருஷ்ணாநந்த தீர்த்த சுவாமி இன்று விஜயம் Dinamalar
ஞானபுரீ மங்கள மாருதி கோவிலுக்கு கிருஷ்ணாநந்த தீர்த்த சுவாமி இன்று விஜயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
07:40

திருவாரூர்:ஆலங்குடி அருகே, ஞானபுரீ மங்கள மாருதி கோவிலுக்கு, சகடபுரம் ஸ்ரீ வித்யாபீடம் ஸ்ரீவித்யா அபினவ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள் இன்று விஜயம் செய்து, திருப்பணிகளை பார்வையிட்டு, ஆலோசனை வழங்குகிறார்.


திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குரு ஸ்தலம் அருகே, ஞானபுரீ என்ற இடத்தில், சங்கடஹர ஸ்ரீ மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கோவிலில், 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயரின், இடுப்பில், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்த, மிருத சஞ்சீவினி; தேகத்தில் புகுந்திருக்கும் ஆயுதங்களின் துகள்களை வெளியேற்றும், விசல்ய கரணீ; விழுப்புண்களை ஆற்றும், ஸாவர்ண கரணீ உள்ளது.உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கும், ஸந்தான கரணீ ஆகியவற்றுடன், பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இது, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு.கோவிலில், 108 அடி உயர பஞ்ச தள விமானம், அர்த்த மண்டபம், லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார், வராகமூர்த்தி, ஹயக்கிரீவர் சன்னதிகள், 176 அடி உயரத்தில் ஆகம சாஸ்திரப்படி ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம், சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஸ்ரீவித்யா அபினவ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள், ஞானபுரீ சங்கடஹர மங்கள மாருதி கோவிலுக்கு, கடந்த பிப்., 25ம் தேதி விஜயம் செய்து, திருப்பணிகளை பார்வையிட்டார்.அப்போது, திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து, இன்று காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள், இக்கோவிலுக்கு மீண்டும் விஜயம் செய்கிறார். திருப்பணிகளை ஆய்வு செய்யும் அவர், குறித்து ஆலோசனைகளையும் வழங்குகிறார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X