அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
08:22

நிலை தடுமாறும் வாகன ஓட்டிகள்: சேலம் - கம்மாளப்பட்டி சாலையில், குரங்குபுளியமரம் பஸ் ஸ்டாப் அருகேவுள்ள பாலத்தை அகலப்படுத்த, சமீபத்தில் பள்ளம் தோண்டினர். தார்சாலையில் மண் கொட்டி, வாகனங்கள், வடக்கு பக்கமாக சுற்றிச்செல்ல பாதை விடப்பட்டுள்ளது. ஆனால், பாலம் வேலை நடப்பது குறித்து, எச்சரிக்கை பலகை இல்லை. இதனால், வெளியூர் வாகன ஓட்டிகள், அருகே வந்த பின், நிலைதடுமாறுகின்றனர். வாகன ஓட்டிகளை எச்சரிக்கைப்படுத்த, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.


மைல் கல் இருக்கு; தொலைவு தெரியல! தலைவாசல், மும்முடி - கோவிந்தம்பாளையம் நெடுஞ்சாலையை, தினமும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். அங்கு சாலையோரம், ஊர் பெயர், தொலைவு உள்ளிட்டவற்றை தெரியப்படுத்த, மைல் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஆறகளூர் ஏரி பகுதியில் உள்ள கல்லில், ஊர் பெயர் மட்டும் உள்ளது. அதிலிருந்த தொலைவு குறித்த எண் அழிந்துவிட்டது. இதனால், அப்பகுதிக்கு புதிதாக வருவோருக்கு, அந்த கல் பயன்படவில்லை. அதை சீரமைக்க வேண்டும்.


தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்: ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரங்களில், மூன்று நாட்களுக்கு முன் வீசிய சூறாவளி காற்றால், ஏரிக்கரை மற்றும் வயல்கள் நடுவே உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து, அதில் இணைக்கப்பட்டிருந்த கம்பிகள், இறுக்கம் தளர்ந்து தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. எஸ்.பாலம், துலுக்கனூர் ஏரிக்கரையில், கால்நடை மருந்தகம் அருகே, வயல்வெளியிலுள்ள மின்கம்ப மேற்பகுதி வளைந்துள்ளது. ஆட்டையாம்பட்டி சாலை குறுக்கே, கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தேங்கும் கழிவுநீரால் கொசுத்தொல்லை: சங்ககிரி, ஐவேலி ஊராட்சி, அக்கமாபேட்டை, ஆதிதிராவிடர் தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, சாக்கடை கால்வாயை தூர்வாராததால், நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஒன்றிய அலுவலகத்தில், மக்கள் புகாரளித்தும் பலனில்லை. சாக்கடையை தூர்வாரி, கொசு மருந்து அடிக்க வேண்டும்.


விளக்கு இல்லை; விபத்துக்கு வாய்ப்பு: சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் நீரோடை உயர்மட்ட பாலம் அருகே, 'எஸ்' வடிவ சாலை செல்கிறது. அந்த வளைவில் எச்சரிக்கை பலகை, மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவில் கனரக வாகனங்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாகின்றனர். அப்பகுதியில், சாலை வளைவு குறித்த எச்சரிக்கை விளக்கு, மின்கம்பம் அமைத்து விளக்குகள் பொருத்த வேண்டும்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X