| மேட்டூர் அணையில் எள் சாகுபடி அமோகம் Dinamalar
மேட்டூர் அணையில் எள் சாகுபடி அமோகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
08:23

மேட்டூர்: மேட்டூர் அணை, வறண்ட நீர்பரப்பு பகுதியில், விவசாயிகள் அதிகளவில் எள் சாகுபடி செய்துள்ளனர். மேட்டூர் அணை நீர்மட்டம், 49 அடியாக சரிந்ததால், நீர்பரப்பின் பெறும் பகுதி வறண்டுவிட்டது. அணையில் தேங்கி நிற்கும் தண்ணீரின் சுற்றுப்பகுதியில், வறண்ட நீர்பரப்பு பகுதியில், சோளம், கம்பி, எள், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மற்ற பயிர்களை விட, எள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இதனால், வரும் மாதத்தில், கொளத்தூர் சந்தைக்கு, எள் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X