| ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மேலும் 45 நாள் பாதுகாப்பு Dinamalar
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மேலும் 45 நாள் பாதுகாப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
08:24

சேலம்: சேலம், லோக்சபா தொகுதியில், கடந்த ஏப்., 18ல் நடந்த ஓட்டுப்பதிவின் போது, 12 லட்சத்து, 46 ஆயிரத்து, 483 பேர் ஓட்டுப்போட்டனர். இது, 77.4 சதவீதம். ஓட்டுகள் பதிவான நவீன இயந்திரங்கள், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும், 23, காலை, 8:00 முதல், பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. சட்டசபை தொகுதிகள் முறையே, ஓட்டுகள் எண்ணப்பட்டு, 24ல், தேர்தல் முடிவு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பின், இயந்திரங்கள், மேலும், 45 நாட்களுக்கு, துப்பாக்கி போலீஸ் சகிதமாக பாதுகாக்கப்பட உள்ளது. சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தாலுகா தலைமையிட பாதுகாப்பில், நவீன ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, இயந்திரங்கள் வைக்கப்படும், இருப்பு அறைகளை சுற்றி, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி, இன்று தொடங்கி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கையில், பின்நாளில், பிரச்னை, சந்தேகம் எழுந்தால், மறு எண்ணிக்கைக்கு உபயோகப்படுத்த, 45 நாள் வைத்திருக்க, ஆணையம் உத்தரவிட்டதால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில், 13 தாலுகாக்கள் உள்ளன. அதில், பெத்தநாயக்கன்பாளையம், காடையாம்பட்டி தவிர்த்து, 11 தாலுகாக்களில், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்படவுள்ளன.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X