| ஓட்டு எண்ணும் மையத்தில் தடுப்பு அமைக்கும் பணி Dinamalar
ஓட்டு எண்ணும் மையத்தில் தடுப்பு அமைக்கும் பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
08:24

ஓமலூர்: ஓட்டு எண்ணுமிடத்தில், பாதுகாப்பு கருதி, மூங்கில் தடுப்பு அமைக்கும் பணி நடந்தது. சேலம் லோக்சபா தொகுதியில் பதிவான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவிபேட்' கருவிகள், கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரியில், துணை ராணுவ வீரர் உள்பட, மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வரும், 23ல், ஓட்டுகள் எண்ணப்படவுள்ளதால், மக்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில், பாதுகாப்பை பலப்படுத்த, மூங்கில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. நேற்று, அந்தந்த தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், ஓட்டு எண்ணும் அறையில், டேபிள், சேர்கள், 'விவிபேட்' கருவிகள் வைக்கப்படும் கூண்டுகள் ஆகியவற்றை, தயார்படுத்தும் பணி நடந்தது. கல்லூரி நுழைவாயில் முன், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, மூங்கில் தடுப்பு, யாரும் கூட்டமாக, 100 மீ., தூரத்துக்குள் சேரக்கூடாது என, அளவீடு செய்து, சாலையில் வரையப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பகுதிகளும், கண்காணிப்பு கேமராக்கள் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X