| தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல் Dinamalar
தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
08:25

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி தென்னை விவசாயிகள் கூறியதாவது: பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில், 1,000 ஹெக்டேரில், தென்னை சாகுபடி செய்திருந்தோம். கடும் வறட்சியால், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை உள்ளிட்ட மூன்று பிர்காவுக்குட்பட்ட, பெரும்பாலான கிராமங்களில், தண்ணீரின்றி லட்சக்கணக்கான தென்னை மரங்கள் உதிர்ந்து, சருகுகளாக தொங்கியபடியும், பட்டுப்போன மொட்டை மரங்களாகவும் காட்சியளிக்கின்றன. இதனால், 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ல், பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்கியதை போன்று, பெயர் பட்டியல், சேதம் உள்ளிட்ட விபரங்களை, வருவாய், வேளாண் துறை மூலம் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு, அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X