| கிணற்றில் விழுந்த விவசாயி பலி Dinamalar
கிணற்றில் விழுந்த விவசாயி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
08:28

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சிறுவேளியநல்லூரை சேர்ந்தவர் ராஜா, 57. விவசாயி; இவர், கடந்த, 15ல், இரவு மடிப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் அவர், கிணற்றில் சடலமாக மிதப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். போதையில் விழுந்து இறந்தாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என, தூசி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X