சென்னிமலையில் மீண்டும் குரங்குகள் அட்டகாசம்: பீதியில் நாட்களை நகர்த்துவதாக மக்கள் புலம்பல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:31

சென்னிமலை: சென்னிமலை மலை மீதுள்ள, முருகன் கோவிலில், ஆயிரக்கணக்கான குரங்குகள் உள்ளன. இதுநாள் வரை, பக்தர்களிடம் சேட்டை காட்டி வந்தன. தற்போது பெருகி விட்ட எண்ணிக்கையால், டவுனுக்குள் வீடுகள், கடைகளில் புகுவது அதிகரித்து விட்டது. ஆரம்பத்தில் மலை பகுதியில் இரை கிடைக்காததால், அடிவாரப் பகுதிக்கு, இரை தேடி வந்தன. தற்போது சென்னிமலை நகரில், வீடுகளில் அழையா விருந்தாளிகளாக நுழைந்து, பொருட்களை தூக்கிப்போவது வாடிக்கையாகி விட்டது. வீடுகளில் ஜன்னல் திறந்திருந்தால், எந்த பொருளும் மிஞ்சாது, என்ற அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. பெரும்பாலும், 10 முதல் 15 குரங்குகள் கூட்டமாக வருகின்றன. இதனால் ஒன்றை துரத்தும்போது மற்றொன்று போக்குகாட்டி, வீடு அல்லது நிறுவனங்களில் புகுந்து விடுகின்றன. வீடுகளில் எந்த ஒரு உணவு பொருளையும், வெயிலில் காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. நாள்தோறும் மிரட்டும் குரங்குகளால், அவற்றுக்கு பயந்து வாழும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடைவீதியில் பழம், பன் போன்றவற்றை, சர்வ சாதாரணமாக நுழைந்து தூக்கி செல்வதாக, கடைக்காரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் குரங்கு கூட்டத்தால், சென்னிமலை நகர மக்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகள், குரங்குகளை பிடிக்க வேண்டும் என்பதே, மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது: சென்னிமலை டவுன் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன், இப்படித்தான் குரங்குகள் தொந்தரவு செய்தன. ஏழு ஆண்டுகளுக்கு முன், குரங்குகள் பிடிக்கப்பட்டு, சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டன. அன்று முதல் தொந்தரவு குறைந்தது. தற்போது எண்ணிக்கை பெருகியுள்ளதால், மீண்டும் அதிகரித்து விட்டது. வனத்துறை அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X