| கல்லை போட்டு மெக்கானிக் கொலை: கோபியில் பகீர்; 8 பேரிடம் விசாரணை Dinamalar
கல்லை போட்டு மெக்கானிக் கொலை: கோபியில் பகீர்; 8 பேரிடம் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:34

கோபி: கோபி அருகே, தலையில் கல்லை போட்டு, மெக்கானிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எட்டு பேரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோபி அருகே, வாய்க்கால் மேட்டை சேர்ந்த, நடராஜன் மகன் மயில்சாமி, 21; மணி டூவீலர் ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக பணிபுரிந்தார். நேற்று அதிகாலை, அதே பகுதியில், தலையின் ஒரு பகுதி சிதைந்த நிலையில், பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். கோபி போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். ஈரோட்டில் இருந்து, மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. நீண்ட தூரம் ஓடியும், எந்த தடயமும், துப்பும் கிடைக்கவில்லை. கோபி அரசு மருத்துவமனைக்கு, மயில்சாமி உடலை அனுப்பி வைத்தனர். வாரச்சம்பளமாக, 1,500 ரூபாய் நேற்று முன்தினம் மாலை பெற்றார். பணத்தை கொண்டு, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, வீட்டருகே மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், நண்பர்கள் தலையில் கல்லைத்தூக்கி போட்டு, கொலை செய்திருப்பது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில், எட்டு பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X