| மொபைல் போனை நோண்டக்கூடாது: போக்குவரத்து போலீசாருக்கு அறிவுரை Dinamalar
மொபைல் போனை நோண்டக்கூடாது: போக்குவரத்து போலீசாருக்கு அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:34

ஈரோடு: போக்குவரத்து சீரமைப்பு பணியின்போது, மொபைல் போனை நோண்டக்க கூடாது, என்று, ஈரோடு டவுன் டி.எஸ்.பி., எச்சரித்தார்.


ஈரோடு மாநகரில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் இல்லாத நாட்களிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் டவுன் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், போக்குவரத்து மற்றும் லோக்கல் போலீசாருக்கு விடுத்துள்ள உத்தரவு: பல்வேறு பணிக்கு சென்றதால், போக்குவரத்து போலீசார் குறைவாக உள்ளனர். எனினும் சிரமம் பார்க்காமல், பிற போலீசார் பணியாற்ற வேண்டும். பணியின்போது மொபைல்போனை நோண்டி கொண்டிருக்க கூடாது. சீரான வாகன இயக்கத்துக்கு வழி செய்து, நெரிசல் ஏற்படாமல் பார்க்க வேண்டும். மேட்டூர் ரோடு, மணிகூண்டு, ஆர்.கே.வி. ரோடு, நேதாஜி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக, வாகனங்களை நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரில் மேம்பாலத்தின் கீழ், வீடுகளில் பார்க்கிங் செய்ய இடமில்லை என்பதால் கார், வேன்களை நள்ளிரவில் நிறுத்தி செல்கின்றனர். அவ்வாறு இரவில் பார்க்கிங் செய்ய கார், வேன்களை அனுமதிக்க கூடாது. கால் டாக்சியினர், ஏராளமானோர் தங்கள் வாகனங்களை, மேம்பாலத்தின் கீழ் நிறுத்துகின்றனர். ஓரிரு கால் டாக்சிகள் அனுமதிக்கலாம். ஆனால், 50 வரை நிறுத்தப்படுகிறது. கால் டாக்சிகளை நிறுத்தும் ஸ்டாண்ட் அல்ல. மேம்பாலத்தின் கீழ், பொதுமக்கள் மட்டும், தங்கள் வாகனங்களை நிறுத்தலாம். அதுபோல் சரக்கு வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் நிறுத்தக்கூடாது. அருகிலுள்ள கடைக்கு, சரக்குகளை கொண்டு செல்ல வேண்டுமென்றால் சிறிது நேரம் நிற்கலாம். தங்கள் சவுகரியத்துக்கு, சரக்கு வாகனங்களை மேம்பாலத்தின் கீழ் நிறுத்த அனுமதிக்க கூடாது. இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X