| பக்கத்து வீட்டு தகராறு: தொழிலாளி மீது வழக்கு Dinamalar
பக்கத்து வீட்டு தகராறு: தொழிலாளி மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:35

கோபி: வாய் தகராறை தட்டி கேட்டதில், ஏற்பட்ட தகராறில், கட்டட தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நம்பியூர் அருகே, மலையப்பாளையத்தை சேர்ந்தவர் நவாஷ், 42; பெருமாநல்லூரில், சைக்கிள் ஸ்டேண்டில் வேலை செய்கிறார். குடிபோதையில் மனைவி ரத்தினாவிடம், நவாஷ் வாய்த்தகராறு செய்தார். இதை பக்கத்து வீட்டுக்காரரான, கட்டடத் தொழிலாளி, வெள்ளியங்கிரி, 42, தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வெள்ளியங்கிரி, கல்லை எடுத்து வீசினார். நவாஷின் மூக்கு, கண்ணில் காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், நவாஷ் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் தந்த புகாரின்படி, வழக்குப்பதிந்த போலீசார், வெள்ளியங்கிரியை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X