ரயில் கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் வழக்குப்பதிவு: போலீசார் பரபரப்பு தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:35

ஈரோடு: ரயில் கொள்ளையர்கள் மீது, நாடு முழுவதும், வழக்குகள் உள்ளதாக, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, மாவெலிபாளையம் பகுதியில், கடந்த, 4, 5ல் மெதுவாக சென்ற ரயில்களில், ஆறு பெண்களிடம் 19 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்தி, மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த பாலாஜி சங்கர் சிண்டே, 50, தானாஜி மன்மத் சிண்டே, 20, சுனில், 22, பப்பு ஈஸ்வர், 25, ஆகிய நால்வரை ஈரோடு ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது: ஈரோடு ஹோம் சிக்னல் அருகே, ஏப்.,27ல் ரயில் முன்பதிவு பெட்டியில் தூங்கிய, இரண்டு பெண்களிடம், 20 பவுன் நகை பறிக்கப்பட்டது. அதில் தொடர்புடையவர்கள் இவர்களே. 27ல் நடந்த கொள்ளை சம்பவத்துக்கு பின், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய பகுதியை சுற்றி வந்துள்ளனர். ஈரோடு ரயில்வே காலனி, ரயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதி, ஈரோடு ரயில்வே பார்சல் அலுவலகம் அருகே சாலையோரம் வசித்துள்ளனர். ஏழு நாட்களுக்கு ஒருமுறை, குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவில், அதாவது ரயில்களில் கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில், கைவரிசை காட்டியுள்ளனர். ஈரோட்டில் இருந்து காவிரி ஆர்.எஸ். வரை ரயில் பாதையை ஒட்டியே நடந்து ரயில்களில் ஏறுவது, இறங்குவது இவர்கள் வாடிக்கை.


கடந்த, 4ல் நடந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, மாவெலிபாளையம் மொபைல்போன் டவரில் பதிவான மொபைல் எண்களில் சிலவற்றை சந்தேகித்தோம். அதில் ஒரு மொபைல்போன் எண், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மொபைல் போன் டவரில் சிக்னல் கிடைத்தது. இதை கூர்ந்து கவனித்து, ரோந்தை தீவிரமாக மேற்கொண்டோம். போலீசார் எண்ணிக்கை அதிகமிருப்பதை அறிந்து, ரயில் கொள்ளையர் சென்று விட்டனர். இரண்டு மணி நேரம் கழித்து கோவை, பின்னர் பாலக்காடு அதன்பின் சோரனூர் என மாறி, மாறி சிக்னல் காட்டி கொண்டே இருந்தது. இறுதியில் மங்களூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே சிக்னல் காட்டியது. இதையடுத்து, 11ல் ரயில்வே போலீசார் மங்களூர் விரைந்தனர். காவிரி பாலத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள், காவலாளிகளிடம் விசாரித்தபோது, 4ம் தேதி இரவு, 2:15 மணிக்கு, நான்கு பேர் இவ்வழியே சென்றதாகவும், ஒருவர் கால் ஊனமாக இருந்ததாகவும் கூறினர். இதை கவனத்தில் கொண்டிருந்த போலீசாருக்கு, மங்களூர் சென்றபோது, கால் ஊனத்துடன், 50 வயது நபர் நடமாடியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அப்போது தான் அக்கும்பல், ரயில் கொள்ளையில் ஈடுபடுவதை ஊர்ஜிதம் செய்தனர். நால்வரையும் கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். சேலம், சங்ககிரி, மாவெலிபாளையம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளையில் ஈடுபடும், மேலும் மூவர் தலைமறைவாக உள்ளனர். சோலாப்பூர், அனந்த்பூரில் ரயில்வே போலீஸ் தனிப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் மீது, நாடு முழுவதும் ரயில் கொள்ளை வழக்கு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X