டூவீலர் பெட்ரோல் டேங்க் வெடித்து வாலிபர் பலி: வேட்டையாடி தப்பியபோது விபரீதம்; இரவில் பகீர் 'சேசிங்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:36

புன்செய்புளியம்பட்டி: வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி, பைக்கில் தப்பிய வாலிபர், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில், பெட்ரோல் டேங்க் வெடித்து பலியானார்.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனச்சரகம், பண்ணாரி வனப்பகுதியில், காட்டுப்பன்றி வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் இரவு, ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, பத்ரகாளியம்மன் கோவில் வனப்பகுதி அருகே, யமஹா கிரெக்ஸ் பைக்கில், காட்டுப்பன்றியை வேட்டையாடி சாக்குப்பையில் கட்டி, ஒரு வாலிபர் பைக்கில் வந்தார். வனத்துறையினரை கண்டதும் அதிவேகத்தில் சென்றார். வேட்டை தடுப்பு காவலர்களும் பைக்கில் துரத்தினர். பவானிசாகர் சாலை, ராஜன்நகர் பாலம் அருகே, இரவு, 9:00 மணியளவில் சென்றபோது, பாலத்தின் தடுப்பு சுவரில், வாலிபரின் பைக் மோதியது. அதே வேகத்தில், பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது. தூக்கி வீசப்பட்ட, வாலிபருக்கு, கால் தொடை மற்றும் இடுப்பு பகுதி யில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். பவானிசாகர் போலீசார் விசாரணையில், காட்டுப்பன்றி வேட்டையாடி பைக்கில் வந்தவர், புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள, கணக்கரசம்பாளையம் முருகன் மகன் அரவிந்தன், 22, சென்டரிங் தொழிலாளி என்பது தெரிந்தது. திருமணமாகி ஒரு மாதமே ஆவதும் தெரிந்தது. பைக்கில் துரத்தி சென்ற வேட்டை தடுப்பு காவலர் லலித் கிஷோர், ராஜன் நகர் செல்லும் வழியில், பைக்கில் இருந்து விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டது. அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


நாட்டு குண்டு வெடித்தது? பண்ணாரி வனப்பகுதியில், புள்ளிமான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இவற்றை வேட்டையாட மர்ம கும்பல், இரவு நேரத்தில், அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை வைக்கின்றனர். இதில் சிக்கி பலியாகும் விலங்குகளை, டூவீலரில் கடத்தி செல்கின்றனர். இதேபோல் அரவிந்தனும் சென்றிருக்கலாம். டேங்க் கவரில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்திருக்கலாம். பால தடுப்பு சுவரில் பைக் மோதியதில், அவை வெடித்து, பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறி பலியாகி இருக்கலாம் எனத் தெரிகிறது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X