| கலெக்டர் அலுவலகத்தில் தேன்கூடு அழிக்கும் பணி Dinamalar
கலெக்டர் அலுவலகத்தில் தேன்கூடு அழிக்கும் பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:36

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஏழு மாடிகளை கொண்டது. ஏழாவது மாடியில் சர்வே துறை (நில அளவை) மாவட்ட அலுவலகம் உள்ளது. இதன் கூரையில் மூன்று தேன் கூடுகள் இருந்தன. பலத்த காற்று வீசும் சமயங்களில், தேனீக்கள் பறந்து, அலுவலக ஊழியர்கள், மக்களை கொட்டி தீர்ப்பதை வழக்கமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று முன்தினம் மாலை சென்றனர். சனிக்கிழமை என்பதால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. எனினும் மேற்புற பகுதி வழியாக சென்று, நான்கு அடி அகலத்தில் இருந்த, இரண்டு தேன் கூடுகளை அழித்தனர். ஆனாலும், முழுமையாக அழிக்க முடியவில்லை. ஒரு தேன்கூடு இன்னமும் அப்படியே உள்ளது. திங்கள்கிழமை (இன்று) இரவு, முழுமையாக அழிக்க முடிவு செய்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X