| அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி Dinamalar
அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:37

தொட்டியிருக்கு; தண்ணீர் இல்லை: இண்டூர் பஞ்., நத்தஹள்ளியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இப்பகுதியினரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, பஞ்., நிர்வாகம் சார்பாக, கடந்த, 2013-2014ல், சிறுமின்விசைபம்புடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதில், ஒரு சில மாதங்கள் மட்டும் குடிநீர் வந்த நிலையில், மின்மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களை கூறி, பஞ்., நிர்வாகம், இதில் தண்ணீர் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.


காட்சிப் பொருளான சுகாதார வளாகம்: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, எச்.புதுப்பட்டி பஞ்.,ல், 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த, 2011-12ல், புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை முறையாக, பராமரிக்க பஞ்., நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், பயன்பாடின்றி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சுகாதார வளாகம் திறக்கப்படுமா? தர்மபுரி அடுத்த கோணங்கிநாயக்கனஹள்ளியில் கடந்த, 2015-2016ல், மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இது திறக்கப்பட்டு, ஒரு சில தினங்களில் பூட்டு போட்டு மூடப்பட்டது. இப்பகுதியில் மீண்டும், திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு, தொற்று நோய் பரவுகிறது. இதை தடுக்க காட்சி பொருளாக உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X