| பொதியம்பள்ளம் தடுப்பணையை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல் Dinamalar
பொதியம்பள்ளம் தடுப்பணையை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:38

கடத்தூர்: பொதியம்பள்ளம் தடுப்பணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த பொதியம்பள்ளம் தடுப்பணை, கடந்த, 2003ல், 86.38 லட்சம் ரூபாய் மதிப்பில், விரிவாக்கம் செய்யப்பட்டது. மழைக்காலங்களில், மூக்கனூர் மலை, வத்தல்மலை பகுதிகளில் இருந்து, வரும் காட்டாற்று வெள்ளத்தால், தடுப்பணை நிரம்பும். இந்த தடுப்பணையில் இருந்து, நல்லகுட்டலஹள்ளி, கடத்தூர், மடதள்ளி, போசிநாய்க்கன்ஹள்ளி, வெங்கடதாரஹள்ளி, சிந்தல்பாடி உள்ளிட்ட, 18 ஏரிகள் மற்றும், 16 தடுப்பணைகளுக்கு தண்ணீர் செல்லும். பொதியம் பள்ளம் தடுப்பணை முறையாக தூர்வாரப் படாததால், மண்மேடாக உள்ளதுடன், பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், போதியளவில், நீரை தேக்கி வைக்க முடியாத நிலையுள்ளது. ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும், பாசன கால்வாய்களில் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளன. இதை தூர்வார விவசாயிகள் பல முறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் பொதியம்பள்ளம் தடுப்பணையை தூர்வார நடவடிக்கை எடுப்பதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. அதன்பின், கண்டுகொள்வதில்லை. எனவே, பொதியம்பள்ளம் தடுப்பணை மற்றும் அதன் பாசன கால்வாய்களை தூர்வார பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X