| தர்மபுரி சட்டக் கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் Dinamalar
தர்மபுரி சட்டக் கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:39

தர்மபுரி:தர்மபுரி சட்டக்கல்லூரி, பஸ் ஸ்டாண்ட் அருகே, நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்வர் சிவதாஸ் விண்ணப்ப வினியோகத்தை துவக்கி வைத்தார். விண்ணப்பம், பொதுப்பிரிவிருக்கு, 500 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 250 ரூபாய். இதற்கான வங்கி டி.டி., எடுத்து சட்டக்கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறவும், அதை சமர்ப்பிக்கவும் வரும், 31 கடைசி நாளாகும். மூன்றாண்டு சட்டப்படிப்புகளில் சேர, ஜூன், 28 முதல் விண்ணப்பம் வழங்கப்படும். மேலும் விபரங்களை, https:// govt-law-collge-dharmapuri.business. site என்ற இணையதளம் மூலம் அறியலாம். விவரங்களுக்கு கல்லூரியை, 04342 270370 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X