மொரப்பூர்: சிந்தல்பாடியில் எலக்ட்ரிக்கல் கடையின் பின் பகுதியில், தகரத்தை அறுத்து, பணம், பொருட்களை திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த சிந்தல்பாடியை சேர்ந்தவர் சக்திவேல், 35. இவர், அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று, முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு, சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்த போது, கடையின் பின் பகுதியில் இருந்த இரும்பு தகரம் அறுக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, ரொக்கப்பணம் 15 ஆயிரம், 15 பேன், இரண்டு வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து, மொரப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.