| நாவல் பழ சீசன் துவக்கம் Dinamalar
நாவல் பழ சீசன் துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:40

தர்மபுரி: நாவல் பழம் சீசன் துவங்கிய நிலையில், விலையும் மக்கள் வாங்கும் அளவுக்கு உள்ளதால், மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கான மருந்தாக திகழ்கிறது. சீசன் காலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும். நாவல் பழம் மற்றும் அதன் விதையில், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளது என்பது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரியவந்தது. இதையடுத்து, நாட்டில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகள் மத்தியில், நாவல் பழம் மற்றும் விதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சீசனுக்கு, சீசன் நாவல் பழ விலை, தொடர்ந்து அதிகரித்து வந்த போதும், பொதுமக்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள், நாவல் பழத்தை ஆர்வத்துடன் வாங்க, ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தாண்டு நாவல் பழ சீசன் தற்போது துவங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாவல் பழம் வரத்து துவங்கி உள்ளது. கடந்தாண்டு ஒரு கிலோ, 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 280 முதல், 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாக, வியாபாரிகள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X