| வெளியூர், சுற்றுலா செல்வோரின் வீடுகளை குறி வைக்கும் கும்பல் Dinamalar
வெளியூர், சுற்றுலா செல்வோரின் வீடுகளை குறி வைக்கும் கும்பல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:42

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில், வெளியூர் மற்றும் சுற்றுலா செல்பவர்களின் வீடுகளை குறி வைத்து திருடும் கும்பல் அதிகரித்துள்ளது. இதை, போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கிருஷ்ணகிரி நகரில், பெரும்பாலான மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகளில், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தோர் அதிகமுள்ளனர். இவர்கள், கோடை விடுமுறையில், குடும்பத்துடன் சொந்த ஊருக்கும், சுற்றுலாவுக்கும் வீட்டை பூட்டிவிட்டு செல்கின்றனர். இதை குறிவைக்கும் திருட்டு கும்பல், பூட்டிய வீடுகளில் தங்கள் கைவரிசையை, தொடர்ந்து காட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவும், கிருஷ்ணகிரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த, சுற்றுலா சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து, ஐந்து பவுன் நகையை திருடி சென்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கோடை விடுமுறையில் வீட்டை பூட்டி விட்டு, வெளியூர் செல்வோர், அக்கம் பக்கம் உள்ளவர்களிடம், தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தந்த பகுதிக்கு, பீட்டுக்கு வரும் போலீசாருக்கும், ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் திருட்டை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X