ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரண்டப்பள்ளியில் இருந்து, போகிபுரம் வழியாக ஏழூர் குட்டை முனியப்பன் கோவில் வரை, 2 கி.மீ., தூரத்திற்கு மண் சாலை செல்கிறது. இச்சாலையில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. முனியப்பன் கோவில் திருவிழா சமயத்தில், இச்சாலையில் தான் பக்தர்கள் பயணம் செய்கின்றனர். மண் சாலையாக உள்ளதால், மழைக்காலங்களில் பயன்படுத்த சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகினறனர். எனவே, தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.