கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள மஹாசாந்த காளிம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பவுர்ணமியையொட்டி விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கோவிலின், 54ம் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி காலை, 8:00 மணிக்கு, மகா கணபதி ஹோமம், சாந்தி ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனையும் நடந்தது. பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பர்கூர் மற்றும் மல்லப்பாடியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.