| அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அவசியம் Dinamalar
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அவசியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:50

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. வாரச் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளியில், சமூக விரோதிகள் பலர் பள்ளி விடுமுறை நாட்களில் மற்றும் தினமும் இரவு நேரங்களில் திறந்தவெளி பாராக மாற்றி மது குடித்து வருகின்றனர். பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டும், உடைத்து விட்டும் செல்வதால், மறுநாள் காலை வரும் மாணவ, மாணவியர் சங்கடப்படும் நிலை ஏற்படுகிறது. பல ஆவணங்கள், கணினி உள்ளிட்ட பல பொருட்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X