| அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல் Dinamalar
அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:53

பயனில்லாத குப்பை தொட்டி: பள்ளிபாளையம் ஒன்றியம், கொக்கராயன் பேட்டையில் நூலகம் அருகே, இரண்டு குப்பைத் தொட்டிகள் பயன்பாடு இல்லாமல், காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பல இடங்களில் சாலையோரத்தில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இது மாதிரி இடங்ளில், பயனில்லாத குப்பை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்: குமாரபாளையம், கவுரி தியேட்டர் அருகே, சர்வீஸ் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை பள்ளங்களால் பலரும் வாகனத்தில் சிக்கி, நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இரவு நேரங்களில் இந்த பள்ளங்கள் சரிவர தெரியாததால், நெரிசல் மிகுந்த இந்த சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே, இந்த சாலையை புதிய தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


பயணிகள் நிழற்கூடம் சரி செய்யப்படுமா? மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்களம் பஞ்சாயத்து, அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே, 15 ஆண்டுகளுக்கு முன், பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மழை, வெப்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் மேல்தளத்தில் இருக்கும் சிலாப்கற்கள் உதிர்ந்து காணப்படுகின்றன. உள்ளே நின்றால், இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பயணிகள் உள்ளனர். நிழற்கூடத்தை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


ஆற்று பாலத்தில் மண் குவியல்: பள்ளிபாளையம் ஒன்றியம், கொக்கராயன்பேட்டை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தின் ஒரு புறத்தில் மண் குவிந்துள்ளது. மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியின்றி, சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரத்தல் சறுக்கி விழ வாய்ப்புள்ளது. எனவே, மண் குவியலை அகற்றிவிட்டு, பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்தி பள்ளியிலிருந்து, வையப்பமலை செல்லும் சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன், வேகத்தடை அமைக்கப்பட்டது. இதுவரை வெள்ளைக்கோடு வரையப்படவில்லை. புதிதாக வரும் வாகனஓட்டிகள் தவறி விழுந்து உடலில் காயம் ஏற்பட்டு எழுந்து செல்கின்றனர். எனவே, வேகத்தடையில் வெள்ளைக்கோடு வரைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் செய்தும் பலனில்லை.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X