| கோவில் நகை, பணத்துடன் பரம்பரை பூசாரி ஓட்டம் Dinamalar
கோவில் நகை, பணத்துடன் பரம்பரை பூசாரி ஓட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
09:56

சேந்தமங்கலம்: கோவில் நகைகள், பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவான பூசாமி மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி போயர் தெருவை சேர்ந்த பரம்பரை பூசாரி பழனி, 60; இவர், அங்குள்ள வீரமாத்தி அம்மன் கோவில் பூசாரியாக இருந்து வந்தார். இக்கோவிலுக்கு சொந்தமான, 60 பவுன் நகை மற்றும், ஆறு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோவில் பராமரிப்பு கணக்குகளை, கவனித்து வந்தார். ஜன., 15ல், கோவில் திருவிழா நடத்துவதற்காக, ஊர் மக்கள் கூடி, பழனியிடம், நகை மற்றும் பணம் குறித்த விபரங்களை கேட்டனர். 'அவற்றை காட்ட முடியாது' என, அவர் கூறியதால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தனர். தகவலறிந்த பழனி, கோவில், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். அதையடுத்து, பிப்ரவரியில், மற்றொரு கோவிலான காளியம்மனுக்கு, விழா நடத்த பொதுமக்கள் முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த பழனி, தன் குடும்பத்துடன், பெருமாபாளையம் மயானத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த போலீசார் மீட்டனர். அதன் பின், ஊருக்கு திரும்பவில்லை. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், நாமக்கல் எஸ்.பி., அருளரசிடம் புகார் செய்தனர். சேந்தமங்கலம் போலீசார், பழனி மீது வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


ஊர் தர்மகர்த்தா சுரேஷ் கூறியதாவது: பழனியை நம்பி, கோவில் நகைகள் மற்றும் பணத்தை கொடுத்திருந்தோம். ஆனால், நகைகள், பணம் குறித்து கேட்டபோது, எந்த பதிலும் கூறாமல், கோவில் மற்றும் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகியுள்ளார். நான்கு மாதமாக எவ்வித தகவலும் இல்லை. பூசாரியை கண்டுபிடித்து, நகை, பணத்தை மீட்டுத்தர, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X