வெண்ணந்தூர்: சேலம் - நாமக்கல், குமரன் விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. தலைவர் கலைவாணன் தலைமை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, எட்டு மாதங்களாக ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கவில்லை. இதனால், வயதானவர்கள் மாத்திரை வாங்க கூட வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். ஓய்வூதியம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெண்ணந்தூரில் உள்ள, அரசு துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகில் உள்ள ஓவர் டேங்கும் சேதமடைந்துள்ளது. இரண்டையும் அகற்றிவிட்டு, புதிய சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். வெண்ணந்தூர் அண்ணாதுரை சிலையில் இருந்து, பஸ் நிறுத்தம் வரை அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியில் டிவைடர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.