ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாத்தலமாக திகழ்வது கொல்லிமலை. இங்கு செல்ல காளப்பநாயக்கன்பட்டி, காரவள்ளி வழியாக சாலை வசதியுள்ளது. ஆனால், இவ்வழியில், 70 கொண்டை ஊசி வளைவு இருப்பதால் கனரக வாகனங்கள் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே, முள்ளுக்குறிச்சியில் இருந்து நரியன்காடு வரை உள்ள, 16 கி.மீட்டருக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொல்லிமலை பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு, சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மூலக்குறிச்சியை ஒட்டிய பகுதிகளில் பாதிப்பு அதிகமுள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் தெரியுமளவிற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாலையை விரைந்து சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.