அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் துளிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:03

*அரவக்குறிச்சி தொகுதியில், நேற்று காலை, 7:00 மணி முதல், மத்திய மண்டல, ஐ.ஜி., வரதராஜ், திருச்சி சரக, டி.ஐ.ஜி., லலிதா லட்சுமி ஆகியோர் தனித்தனியாக சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

*க.பரமத்தி சந்தைப்பேட்டையில், தி.மு.க., தரப்பில் டோக்கன் தருவதாக தகவல் வெளியானது. இதனால், பொதுமக்கள் அங்கு குவிந்தனர். போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.


*புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பலர் பூத் சிலிப்புடன் ஓட்டுப் போட வந்தனர். அடையாள அட்டை கொண்டு வரததால், அவர்களை தேர்தல் அலுவலர் அனுமதிக்க வில்லை. இதனால், அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.


*பள்ளப்பட்டி அரசு மேல்நிலைபள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர், ஸ்ரீ ஹரி பிரதாப் சாஹி ஆய்வு செய்தார். அங்கு, வாக்காளர்களுக்காக பானையில் குடிநீர் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, தேர்தல் அலுவலர்களை பாராட்டினார்.


*அ.ம.மு.க., வேட்பாளர் சாகுல் அமீது, பள்ளப்பட்டி அரசு நடுநிலைபள்ளியிலும், அருந்தமிழர் குடியரசு கட்சி வேட்பாளர் தலித் பாண்டியன், வேலாயுதம்பாளையம் அரசுப் பள்ளியிலும் ஓட்டுப் போட்டனர்.


*அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில் நாதன், தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி, மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோருக்கு, கரூர் சட்டசபை தொகுதியில்தான் ஓட்டு உள்ளது. எனவே, அவர்கள் அரவக்குறிச்சியில் தங்களுக்காக கூட ஓட்டுப் போட முடியவில்லை.


*கரூர் லோக்சபா தொகுதி காங்., கட்சி வேட்பாளர் ஜோதிமணி, பெரிய திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஓட்டுப் போட்டார்.


*பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், நோயாளிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக, வீல் சேர்கள் வைக்கப்பட்டிருந்தன.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X