| வாய்க்கால் கரை சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளால் அவதி Dinamalar
வாய்க்கால் கரை சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:04

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி வாய்க்கால் கரையில் இருந்து, மேட்டு மகாதானபுரம் வரை செல்லும் சாலையோரத்தில், ஏராளமான முட்செடிகள் வளர்ந்து பாதையை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராய புரம் அடுத்த மகிளிப்பட்டி வழியாக, கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இதன் கரையில், மேட்டு மகாதானபுரம் வரை செல்லும் மண் சாலை உள்ளது. இவ்வழியாக, அப்பகுதி பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சாலையின் இருபுறமும் ஏராளமான முட்செடிகள் வளர்ந்து, பாதையை ஆக்கிரமித்திருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். முட்செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X