| அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர் Dinamalar
அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:05

பள்ளம் விழுந்த பாதாள சாக்கடை: குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, கரூர் - திருச்சி சாலையோரத்தில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாக்கடையின் மேல் பகுதியில், உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடை களுக்கு வந்து செல்லும் பொது மக்கள், பஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்பவர்கள், இந்த உடைப்பில் விழுந்து பாதிக்கப்படுகின்றனர். இரவில் வரும் வாகன ஓட்டிகள், விழுந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது. உடைப்பை சரி செய்ய வேண்டும்.


சுரங்கப்பாதையில் தண்ணீர் தேக்கம்: குளித்தலை அடுத்த, லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகே, கடந்த ஆண்டு, குகை வழிப்பாதை கட்டப்பட்டது. இப்பாதையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே நிர்வாகம் வழங்க வில்லை. இந்நிலையில், மழைக்காலத்தில் குகைவழிப்பாதையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. பயன்பாட்டுக்கு முன்பே, குகைவழிப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த தயங்குகின்றனர்.


நிழற்கூடத்தில் டூவீலர் நிறுத்தம்: குளித்தலை அடுத்த புலியூர், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, டவுன் பஞ்., அலுவலகம் அருகே, திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கான பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பஞ்., சார்பில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள் பஸ்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்துவதில்லை. இதனால், நிழற்கூடத்தை டூவீலர் நிறுத்தமாக அப்பகுதியை சேர்ந்த சிலர் பயன்படுத்துகின்றனர். இங்கு பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சேதமான இருக்கை; பயணிகள் அவதி: குளித்தலை நகராட்சி , சுங்ககேட் பஸ் நிறுத்தத்தில், மணப்பாறை, பஞ்சப்பட்டி, திண்டுக்கல், தரகம்பட்டி மற்றும் பல கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. அதில் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நிழற்கூடத்தில் உட்கார முடியாததால், பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும், நிழற்கூடத்தை, அருகில் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.


கார், வேன் நிறுத்தும் இடத்தில் துர்நாற்றம்: குளித்தலை அடுத்த, தோகைமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, வாடகை வேன்கள், கார்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் செல்பவர்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், வேன் ஓட்டுனர்கள் சிறுநீர் கழிப்பிடத்திற்கு செல்லாமல், கார், வேன் நிறுத்தும் இடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க வேண்டும்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X