| அபாயகரமான குவாரி குழிகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள் Dinamalar
அபாயகரமான குவாரி குழிகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:05

கரூர்: க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள குப்பம், தென்னிலை, க.பரமத்தி, முன்னூர், பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் அதிகம் உள்ளன. இங்கிருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் சாலையோரம் குவாரிகளை நடத்துவோர், டெண்டர் முடியும் வரை கற்களை வெட்டி எடுத்துவிட்டு, அனுமதி முடிந்தவுடன் குழிகளை மூடாமல் அப்படியே விட்டு செல்கின்றனர். சாலையோரத்தில் உள்ள இந்த குழிகள், 60 அடி ஆழம் வரை உள்ளன. இரவில், இருசக்கர வாகனங்களில் செல்வோர், இந்த அபாயகராமான குழிகளில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. டெண்டர் முடிந்தவுடன், குவாரிகளை விட்டுச் செல்லும்போது, சாலையோரம் தடுப்புச் சுவர் கட்ட வேண்டியது அவசியம்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X