| டோக்கன் சிஸ்டம் அரவக்குறிச்சியில் எடுபடாது: அமைச்சர் விஜயபாஸ்கர் Dinamalar
டோக்கன் சிஸ்டம் அரவக்குறிச்சியில் எடுபடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:07

கரூர்: ''ஆர்.கே.நகரில் செயல்படுத்திய டோக்கன் சிஸ்டம், அரவக்குறிச்சியில் எடுபடாது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், நேற்றிரவு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகரில் செயல்படுத்திய டோக்கன் சிஸ்டம், அரவக்குறிச்சி தொகுதியில் எடுபடாது. செந்தில் பாலாஜி கூறியுள்ள மின் திருட்டு புகாரில் உண்மை இல்லை. அதை ஆதாரத்துடன் தருகிறேன். ஆள் கடத்தலில் கை தேர்ந்தவர் எதிர்க்கட்சி வேட்பாளர். வரும், 2023க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாது. கரூர் லோக்சபா தொகுதி, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், கருத்து கணிப்புகளை மீறி, அ.தி. மு.க., வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க.,வினர் கொடுத்த, 2,000 ரூபாய் ஜெராக்ஸ் குறித்து, தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X