| 1,200 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்துடன் கூடிய நடுகல் Dinamalar
1,200 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்துடன் கூடிய நடுகல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:41

கிருஷ்ணகிரி: வட்டெழுத்துடன் கூடிய, 1,200 ஆண்டு பழமையான நடுகல், அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த, சாப்பரம் பஞ்., பனகமுட்லு கிராமத்தில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், குழுத்தலைவர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். முரளி என்பவரின் நிலத்தில், 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வட்டெழுத்துடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியதாவது: இந்த நடுக்கல்லில், ஒரு கையில் வாள், மறு கையில் வில்லுடன் வீரன் ஒருவன் போரிடுவது போல் உள்ளது. மார்பின் கீழ் பகுதியில், அம்பு பட்டு இறந்துள்ளான். போரில் இறந்ததன் நினைவாக, இக்கல் எடுக்கப்பட்டுள்ளது. அவன் மனைவியும் உடன்கட்டை ஏறியுள்ளார். இந்த வழக்கம், எட்டாம் நூற்றாண்டில் இருந்ததற்கான சான்றாகவும் கொள்ளலாம். மாவட்டத்தில் கிடைத்த மிக பழமையான நடுகல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார். நடுகல்லை, அருங்காட்சியத்துக்கு நில உரிமையாளர் அளித்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X