| 3 ஆண்டில் 2 கோடி பெண்கள் வேலையிழப்பு: உழைக்கும் ஒருங்கிணைப்புக்குழு 'பகீர்' Dinamalar
3 ஆண்டில் 2 கோடி பெண்கள் வேலையிழப்பு: உழைக்கும் ஒருங்கிணைப்புக்குழு 'பகீர்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:43

சேலம்: இந்தியாவில், இரண்டு கோடி பெண்கள், கடந்த மூன்றாண்டில், வேலை வாய்ப்பை இழந்ததாக, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.


சி.ஐ.டி.யு., உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, 11வது மாநில மாநாடு, சேலத்தில், இரண்டாவது நாளக நேற்று நடந்தது. பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, விவாதித்து, தீர்மானங்களாக நிறைவேற்றினர். மத்திய, மாநில அரசு பெண் ஊழியர், முறைசாரா தொழிலாளர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநாடு குறித்து, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சிந்து கூறியதாவது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான, பாலியல் புகார் குறித்த விசாரணை, முறையாக நடத்தவில்லை. பெண்கள் பணிபுரியும் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, பாலியல் புகாரை விசாரிக்க, கமிட்டி அமைக்க வேண்டும். அதில், தொழிற்சங்கத்தினரையும், உறுப்பினராக்க வேண்டும். உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் சம வேலைக்கு; சம ஊதியம் தேவை. அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கும், மகப்பேறு சலுகை வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை, அரசு ஊழியராக்க வேண்டும். பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். நவீன மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த மூன்றாண்டில், இரண்டு கோடி பெண்கள், இந்தியாவில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். சி.ஐ.டி.யு., அகில இந்திய துணைத்தலைவர் மாலதி சிட்டிபாபு, மாநில அமைப்பாளர் மகாலட்சுமி உடனிருந்தனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X