| அரசு பஸ்களில் வழித்தட நீட்டிப்பு: திரும்ப பெற சம்மேளனம் கோரிக்கை Dinamalar
அரசு பஸ்களில் வழித்தட நீட்டிப்பு: திரும்ப பெற சம்மேளனம் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:44

சேலம்: அரசு பஸ்களின் தட நீட்டிப்பு, மிகை ஊதியம், தொழிலாளர்களின் பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை திரும்ப பெற, போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு., கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து மாநில பொது செயலாளர் ஆறுமுக நயினார், போக்குவரத்து, முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து ஊழியர்களின், பணி நிலைமையை மாறுதல் செய்யக்கூடாதென, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இன்னும் அமல்படுத்தவில்லை. இதே கருத்தை தொழிலாளர் துறையும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதையெல்லாம் போக்குவரத்து நிர்வாகங்கள் நிராகரித்து, பணி நிலைமைகளில், மாறுதல் செய்கிறது. கடந்த, 2018, ஜூன், 5க்கு பின், தொழிலாளர் நலத்துறை, உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுத்தியுள்ள பஸ்களின் தட நீட்டிப்புகளை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு, மிகை ஊதியம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப்பெற வேண்டும். பழைய பணி நிலைமைகளை, கடைப்பிடிக்க வேண்டும். பழி வாங்கும் அடிப்படையில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட, அனைத்து ஊர்மாற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். அனைத்து கோட்ட நிர்வாக இயக்குனர்களுக்கும் அனுப்பியுள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X