| 'உளவுத்துறைக்கு தேசபக்தி தேவை': இந்து முன்னணி நிர்வாகி வருத்தம் Dinamalar
'உளவுத்துறைக்கு தேசபக்தி தேவை': இந்து முன்னணி நிர்வாகி வருத்தம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:45

வேலூர்: ''அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேச பக்தியுடன் உளவுத்துறை செயல்பட வேண்டும்,'' என்று, இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம் கூறினார்.


இந்து முன்னணி கோட்ட பொதுக்குழு கூட்டம், வேலூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அவர், கூறியதாவது: மக்கள் நீதி மையம் கமலஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஒரு இந்து என்று பேசியிருக்கிறார். இது தமிழ்நாட்டில் மத மோதல்களை உருவாக்கும் திட்டமிட்ட ஒரு செயல். கோட்சே செயலை யாரும் இதுவரை நியாயப்படுத்தி பேசவில்லை. ஆனால், கமலஹாசன் திட்டமிட்டு, இந்து தீவிரவாதி என்று சொல்லியிருக்கிறார். எனவே, மக்கள் நீதி மையம் கட்சியை தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மத பிரசாரத்தை தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேச பக்தியுடன் உளவுத்துறை செயல்பட வேண்டும். மதசார்பற்ற அரசாங்கம் என்று சொல்லிவிட்டு, இந்து மதத்தின் மீது கை வைப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X