இசை பள்ளிக்கு சொந்த இடம் கிடைக்குமா? ...பாம்புகள் படையெடுப்பால் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2019
01:36

கடலுார்: கடலுார் மாவட்ட அரசு இசை பள்ளிக்கு, சொந்த இடம் ஒதுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய அடிப்படை வசதிகள் இன்றி, இசை பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.



தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், 1997ம் ஆண்டு, திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட இடங்களில், முதற்கட்டமாக மாவட்ட அரசு இசை பள்ளிகள் துவக்கப்பட்டது. இதையடுத்து, 1998ம் ஆண்டு, கடலுார், விழுப்புரம், கரூர், பெரம்பலுார் ஆகிய இடங்களில் மாவட்ட இசை பள்ளி துவக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அரசு இசை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.கடலுார் 'டாப்'தமிழகத்தில் உள்ள 17 இசை பள்ளிகளில், கடலுார் மாவட்ட அரசு இசை பள்ளியில் மட்டும் அதிகபட்சமாக 105 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.




இதேபோல், இப்பள்ளி மாணவர்களின் இசை திறனை கண்டு, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள், பாராட்டு தெரிவித்துள்ளனர்.இந்த பள்ளியில், பயின்ற 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இசைக் கச்சேரி நடத்தி வருகின்றனர்.




மேலும், பலரும் வெளிநாடுகளுக்கு சென்று, புகழ் பெற்று விளங்குகின்றனர்.சேர்க்கை தகுதிகள் இசை பள்ளியில் 13 வயது முதல் 25 வயது வரையிலான ஆண், பெண் இருபாலரும் சேரலாம். குரலிசை வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் பிரிவிற்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.நாதஸ்வரம், தவில், தேவாரம் பிரிவிற்கு, தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.கல்விக் கட்டணம் ஆண்டுக்கு, ரூ152 மட்டுமே. ஏழை மாணவர்களுக்கு, அரசு விதிகளின்படி தங்கும் விடுதி, உணவு வசதி உண்டு.




மேலும், அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இசை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், மூன்று ஆண்டுக்கு, மாதம் ரூ.400 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.எதிர்கால பயன்கள்இசை பள்ளியில் பயின்று முடிப்பவர்கள், சிறந்த இசை கலைஞராக உருவாக முடியும். அரசு, அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி மற்றும் சுயநிதி தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணி புரியலாம். தனியார் 'டிவி'க்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், இசை போட்டிகளில் பங்கேற்பதுடன், நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றலாம்.அகில இந்திய வானொலி, துார்தர்ஷன் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞராக நிகழ்ச்சிகள் அளிக்கலாம்.




இசைக் கல்வியில், பட்டயம், இளம், முதுகலை பட்டங்கள், டாக்டர் பட்டம் போன்ற உயர்கல்வி பயில முடியும். மேடைப் பாடகராகவும், சொந்தமாக இசைக் குழு அமைக்கலாம்.பாம்புகள் அச்சுறுத்தல்கடலுார் புதுப்பாளையம் மெயின் ரோட்டில், தனியார் வாடகை கட்டடத்தில் மாவட்ட அரசு இசை பள்ளி துவங்கப்பட்டது. பின்னர், அந்த கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து, கடலுார் சப்-ஜெயில் ரோடு, பழைய பத்திரப்பதிவு அலுவலக கட்டடத்தில், செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மரங்கள் மற்றும் புதர்கள் மண்டிக் கிடப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.




மேலும், போதிய கழிப்பறை வசதியின்றி, மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். பள்ளியில் எதிர்புறம் உள்ள கழிப்பறை கட்டடம், பழுதடைந்து பயனற்று கிடக்கிறது. இதனை சீரைமத்திட வேண்டும்.இடம் கிடைக்குமா?கடலுார் மாவட்ட அரசு இசை பள்ளிக்கு, சொந்த கட்டடம் கட்டுவதற்கு, இடம் ஒதுக்கி தருமாறு, மாவட்ட நிர்வாகத்திடம், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேப்பர் மலை பகுதியில், இசை பள்ளிக்கு இடம் ஒதுக்கீடு செய்ய, மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. இருந்தாலும், வெளியூரில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்கு சிரமம் ஏற்படும் என்ற சிக்கல் எழுந்துள்ளது.




கடலுார் நகர பகுதிக்குள் அரசு இடத்தை ஒதுக்கீடு செய்தால், ரூ. ஒரு கோடி வரை செலவு செய்து, இசை பள்ளிக்கான கட்டடம் அமைப்பதற்கு, கலை பண்பாட்டுத்துறை தயாராக உள்ளது.


 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X