ரூ.5 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2019
07:19

நீலாங்கரை : இ.சி.ஆர்., பகுதியில், 5 கோடி ரூபாயில், வடிகால் கட்டப்படுவதால், மழைநீரால் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, இ.சி.ஆரின், மேற்கு பகுதியான வெட்டுவாங்கேணி, பாரதியார் தெரு, ராமலிங்கம் நகர், கோபிநாத் அவென்யூ, பெத்தேல் நகர் பகுதியில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும்.இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த பகுதிகளில், 5 கோடி ரூபாயில், மழைநீர் வடிகால் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.பெத்தேல் நகரில், இரண்டு பகுதிகளாக பிரித்து, 3 கோடி ரூபாயில் வடிகால் கட்டப்படுகிறது.



ஒரு பகுதியில், 980 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி ஆழத்திலும்; மற்றொரு பகுதியில், 1,245 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி ஆழத்திலும், மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது. இந்த பணிகள், முடியும் நிலையில் உள்ளன.அதேபோல், 2 கோடி ரூபாயில், ராமலிங்கம் நகர், பாரதியார் தெருவில், 2,230 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி ஆழத்திலும்; கோபிநாத் அவென்யூவில், 1,570 அடி நீளம், 2 அடி அகலம், 2.5 அடி ஆழத்திலும், மழைநீர் வடிகால் கட்டும் பணி நடக்கிறது.இந்த பணியை, இரண்டு மாதத்தில் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மொத்த வடிகாலில் இருந்து வடியும் மழைநீர், பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், வடிகால் கட்டமைக்கப்படுகிறது.



இதன் மூலம், இ.சி.ஆரின் மேற்கு பகுதியில், மழைநீர் தேங்குவது தடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X