| பழுதான மின்மாற்றியால் கருகும் பயிர்கள்: ஜெனரேட்டர் மூலம் நீர் பாய்ச்சும் விவசாயிகள் Dinamalar
பழுதான மின்மாற்றியால் கருகும் பயிர்கள்: ஜெனரேட்டர் மூலம் நீர் பாய்ச்சும் விவசாயிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 மே
2019
07:36

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, திருப்புறம்பியம் பகுதியில், மின்மாற்றி பழுதானதால், 'பம்ப் செட்'களை இயக்க முடியாத விவசாயிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து, கருகும் பயிர்களுக்கு, நீர் பாய்ச்சி வருகின்றனர்.


தஞ்சாவூர், கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம், உத்திரை, ஆலமன்குறிச்சி ஆகிய பகுதிகளில், விவசாயிகள், பம்ப் செட் மூலம், குறுவை சாகுபடியை துவங்கியுள்ளனர். இப்பகுதியில், விவசாயிகள் பெரும்பாலும், ஆடுதுறை, 37 ரக நெல் விதைகளை தேர்வு செய்து, நடவு நட்டு, 90 நாட்கள் ஆகின்றன. தற்போது, அனைத்து நெற்பயிர்களும், சூல் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. இந்நிலையில், திருப்புறம்பியத்தில் உள்ள மின்மாற்றி, நான்கு நாட்களாக பழுதாகியுள்ளது. மின் வாரியத்துக்கு, விவசாயிகள் தகவல் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விவசாயிகள் பம்ப் செட் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.நெற்பயிர்கள் வாடுவதை கண்ட சில விவசாயிகள், கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து, பம்ப் செட்களை இயக்கி, தண்ணீர் பாய்ச்சி, பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். ஜெனரேட்டரை வாடகைக்கு எடுக்க வசதியில்லாத விவசாயிகள், காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற முடியாமல், கவலை அடைந்துள்ளனர்.


திருப்புறம்பியம் விவசாயி, இளங்கோவன் கூறியதாவது: ஜெனரேட்டருக்கு நாள் வாடகையாக, 3,500 ரூபாயும், ஒரு மணி நேரத்துக்கு, 8 லிட்டர் டீசலும் செலவாகிறது. விவசாயிகள் நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, கருகி வரும் பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். மின் வாரியம் இனியும் தாமதிக்காமல், உடனடியாக மின்மாற்றியை சீரமைத்து, மின்சாரத்தை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X