| 'ஞானபுரீ மங்கள மாருதி கோவிலில் 6 மாதங்களில் கும்பாபிஷேகம்' Dinamalar
'ஞானபுரீ மங்கள மாருதி கோவிலில் 6 மாதங்களில் கும்பாபிஷேகம்'
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

22 மே
2019
08:10
பதிவு செய்த நாள்
மே 21,2019 07:37

திருவாரூர்: ''ஞானபுரீ மங்கள மாருதி கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து, ஆறு மாதங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,'' என, கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள் தெரிவித்தார்.


திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில், குரு ஸ்தலம் அருகே, ஞானபுரீ என்ற இடத்தில், ஸ்ரீசங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணி, ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில் நடந்து வருகிறது .பதரி சங்கராச்சாரியார், கிருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள், கோவிலுக்கு வந்து, திருப்பணிகளை பார்வையிட்டார். அவர் கூறுகையில், ''இன்னும், ஆறு மாதங்களில், இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். திருப்பணியில் எந்த தேக்கமும் இல்லை,'' என்றார்.ரமணி அண்ணா கூறும் போது, ''சகடபுரம் சுவாமிகளால் திருப்பணிகள் செய்யப்பட்டு, அதிவிரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,'' என்றார்.


 

Advertisement
மேலும் திருவாரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X