| பல்லாங்குழியான முத்துமலை ரோடு: போக்குவரத்து அதிகரித்தும் அலட்சியம் Dinamalar
பல்லாங்குழியான முத்துமலை ரோடு: போக்குவரத்து அதிகரித்தும் அலட்சியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 மே
2019
23:23

பொள்ளாச்சி:சூலக்கல் பகுதியில் இருந்து முத்துமலை முருகன் கோவிலுக்கு செல்லும், ரோட்டை சீரமைக்க மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய எல்லையில், சென்னியூர் - முத்துக்கவுண்டனுார் ரோடு அமைந்துள்ளது. பெரும்பதி பிரிவில் இருந்து, முத்துக்கவுண்டனுார் மயானம் வரையிலான, மூன்று கி.மீ., துாரத்துக்கான தார்ரோடு, கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன் பராமரிக்கப்பட்டது.

சென்னியூர் சுற்றுப்பகுதியில் இருந்து, கூடுதல் பாரம் ஏற்றிய ஜல்லி லோடு லாரிகள், கிணத்துக்கடவு கிழக்கு பகுதியில் இருந்து செம்மண் மற்றும் கருங்கல் பாரம் ஏற்றிய, 100க்கும் மேற்பட்ட லாரிகள் இவ்வழியாக கேரளாவுக்கு தினமும், செல்கின்றன.இதன்காரணமாக, ரோடுளில் பள்ளம் ஏற்பட்டு, இருசக்கர வாகனங்கள், கார்கள் செல்ல முடியாத அளவுக்கு ரோடு மோசமடைந்தது.


பலமுறை தெரிவித்தும் ரோடு சீரமைக்கப்படாததால், சென்னியூர் - முத்துக்கவுண்டனுார் இடையில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து, கடந்த ஆண்டு, 'பொத்தல்'களுக்கு கான்கிரீட் கலவையிட்டு, ரோட்டை சீரமைத்தனர். தற்போது, கான்கிரீட் கலவையிடப்பட்ட பகுதியை தவிர, மற்ற பகுதிகளில் ரோடு, பல்லாங்குழியாக மாறியுள்ளது.



தற்போது, வாகன நடமாட்டம் இல்லாத பல ரோடுகள் சீரமைக்கப்படுகின்றன. நீண்ட காலமாக சீரமைக்கப்படாத சென்னியூர் - முத்துக்கவுண்டனுார் ரோட்டையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என, முத்துமலை முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மதுக்கரை, சுந்தராபுரம் வழியாக கோவை செல்லும் மக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X