நாளை ஓட்டு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 மே
2019
14:39
பதிவு செய்த நாள்
மே 21,2019 23:55

சென்னை: தமிழகத்தில், நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளதால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஓட்டு எண்ணிக்கையில், 15 ஆயிரத்து, 904 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.


@Image@




இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கூறியதாவது:தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 22 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நடந்துள்ளது. இத்தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், 45 மையங்களில், நாளை எண்ணப்பட உள்ளன.ஓட்டு எண்ணும் மையங்களில், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில், 7,974 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஓட்டு எண்ணும் மையங்கள் உள்ளே, அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.




லோக்சபா தொகுதி ஓட்டுகள் தனியாகவும், சட்டசபை இடைத்தேர்தல் ஓட்டுகள் தனியாகவும் எண்ணப்படும். ஓட்டு எண்ணும் மையங்களில், 14 மேஜைகள் போடப்பட்டு, ஓட்டுகள் எண்ணப்படும்.ஒவ்வொரு மேஜையிலும், ஓட்டுகளை எண்ண, ஒரு, 'மைக்ரோ' பார்வையாளர் உட்பட, மூன்று பேர் இருப்பர். மொத்தம், 4,245 மைக்ரோ பார்வையாளர்கள் உட்பட, 15 ஆயிரத்து, 904 பேர், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.மேஜைக்கு, ஒருவர் வீதம், 14 முகவர்கள், இரண்டு தலைமை முகவர்கள் என, 16 பேர், ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்படுவர். ஒரு சுற்று எண்ணிக்கை முடிந்த பின், அடுத்த சுற்று எண்ணிக்கை துவக்கப்படும்.



ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஐந்து ஓட்டுச்சாவடிகளில் பதிவான, ஒப்புகை சீட்டுகள், தனி மேஜையில் எண்ணப்படும்.ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள், எண்ணி முடிக்கப்பட்ட பின், ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். தபால்

ஓட்டுகள் தனியே எண்ணப்படும். காலை, 8:00 மணிக்கு, எண்ணும் பணி துவங்கும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பழுது ஏற்பட்டிருந்தால், அது தனியாக வைக்கப்படும். அதை எவ்வாறு கையாள வேண்டும் என, தேர்தல் ஆணையம் சில விதிகளை அறிவித்துள்ளது; அவை பின்பற்றப்படும். ராணுவம் உட்பட அயல் பணியில் இருப்போர், தங்கள் ஓட்டுகளை, மின்னணு முறையில் பதிவு செய்துள்ளனர். அந்த ஓட்டுகள் தனியே எண்ணப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.



மொபைல் போனுக்கு தடை: முகவர்களுக்கு கட்டுப்பாடு




ஓட்டு எண்ணும் மையத்தில், ஒவ்வொரு வேட்பாளருக்கும், 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவர். சில தொகுதிகளில், 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த தொகுதிகளில், அனைத்து வேட்பாளர்களின் முகவர்களை அனுமதிப்பதில், சிரமம் ஏற்படும். அப்போது, அவர்களுக்குள் விட்டு கொடுத்து கொள்ளும்படி, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காலை, 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என்பதால், 7:00 மணிக்கு முன்னதாக, அனைவரும் வந்து விட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்திலிருந்து, 100 மீட்டர் சுற்றளவுக்குள், முகவர்கள், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.முகவர்கள் ஒரு முறை, ஓட்டு எண்ணும் மையத்திலிருந்து வெ ளியேறினால், மீண்டும் உள்ளே வர, அனுமதிக்கப்பட மாட்டார்கள். மொபைல் போன் எடுத்து வர, அனுமதி கிடையாது. பென்சில், காகிதம் எடுத்து வர மட்டும் அனுமதி உண்டு.தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர் உட்பட, ஒரு சிலர் மட்டுமே, மொபைல் போன் எடுத்து செல்ல, தேர்தல் ஆணையம், அனுமதி வழங்கி உள்ளது.



'குளோஸ்' பட்டன்:ஆணையம் விளக்கம்!




ஓட்டுப்பதிவு முடிந்ததும், தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், 'குளோஸ்' என்ற பட்டனை அழுத்தியிருக்க வேண்டும். அப்படி அழுத்தாமல், 'பேக்கிங்' செய்திருந்தால், அந்த இயந்திரத்தில், பதிவான ஓட்டுக்கள் தெரியவராது. அத்தகைய நிலைமை ஏற்பட்டால், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், 'டோட்டல்' என்ற பட்டனை அழுத்தி, தலைமை அலுவலரின், 17, 'சி' படிவத்தை ஒப்பிட்டு, எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.இரண்டு ஓட்டு எண்ணிக்கையும் சரியாகஇருந்தால், 'ரிசல்ட்' என்ற பட்டனை அழுத்தி, வேட்பாளர் ஓட்டு விபரத்தை தெரிவிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



எந்த தொகுதி; எத்தனை சுற்று




தமிழகத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளில் அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 34 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.வேலுார் தவிர 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. நாளை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகள் தனித்தனியே எண்ணப்பட உள்ளன.ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பதிவான ஓட்டுகள் 14 மேஜைகளில் எண்ணப்படும்; இது ஒரு சுற்றாகும். அந்த வகையில் அதிகபட்சமாக திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் 34 சுற்று ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகளில் 32 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 19 சுற்றுகளில் எண்ணிக்கை நிறைவடையும்.கோவை 30; கன்னியாகுமரி, ராமநாதபுரம் 28; கிருஷ்ணகிரி, திருப்பூர் 26; விழுப்புரம், சேலம், திருச்சி, சிவகங்கை 25; அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலுார், தென்காசி 24; தர்மபுரி, ஆரணி, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சிதம்பரம், நாகப்பட்டினம், மதுரை தேனி, விருதுநகர் 23; வட சென்னை, ஈரோடு, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி 22; தென் சென்னை, கடலுார், துாத்துக்குடி 21 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.இடைத்தேர்தல் நடந்துள்ள சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக பூந்தமல்லி தொகுதியில் 28 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படும். அதற்கு அடுத்தபடியாக ஓசூரில் 26; சூலுாரில் 24; பாப்பிரெட்டிப்பட்டி மானாமதுரை, ஆண்டிபட்டி தொகுதிகளில் 23; பெரம்பூர், திருப்போரூர் சோளிங்கர், திருவாரூர், திருப்பரங்குன்றம், பெரியகுளம், பரமக்குடி தொகுதிகளில் 22; குடியாத்தம், தஞ்சாவூர், சாத்துார், தொகுதிகளில் 21; நிலக்கோட்டை, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் 19; ஆம்பூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் 18 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
22-மே-201919:42:26 IST Report Abuse
Anumanthan Gnanasekaran அண்ணே, நீங்க ரொம்ப பெரிய ஆளு. ஞான த்ரிஸ்டில் எல்லாவர்டையும் ரொம்ப சரியாக கண்டு பிடித்து சொல்லிட்டீங்க. சூப்பர் அண்ணே.
Rate this:
Share this comment
Cancel
Sangeedamo - Karaikal,இந்தியா
22-மே-201916:16:55 IST Report Abuse
Sangeedamo இந்திய மக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த "நல் விடியல் நாள்" வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
22-மே-201913:00:04 IST Report Abuse
Ashanmugam நாளையோடு உங்க தலைவலி முடிகிறது. அடுத்த தலைவலி ஆளும்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஆரம்பம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X