முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வந்தனர்.
இக்கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்க்கு சொந்தமான ஆடு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குட்டி ஈன்றது. குட்டியின் கண்களின் இருபுறமும் சதை வளர்ந்து கண்களை மறைத்துள்ளது.இதனால் ஆட்டுக்குட்டிக்கு கண்கள் தெரியாமல் உள்ளது. வித்தியாசமான கண்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இது குறித்து ஆட்டுக்குட்டி உரிமையாளர் கூறுகையில்,வித்தியாசமாக ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.குட்டிக்கு ஏதும் குறையாடுகள் உள்ளதா என்று கால்நடை டாக்டரிடம் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறினார்.