| தினமலர் செய்தி எதிரொலி மாடு உரிமையாளருக்கு அபராதம் Dinamalar
தினமலர் செய்தி எதிரொலி மாடு உரிமையாளருக்கு அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மே
2019
00:53

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் இருந்து சாயல்குடி,தேரிருவேலி,பரமக்குடி செல்லும் சாலைகள், பஜார் பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் பசு மாடுகளின் உரிமையாளர்கள் பால் கறந்து விட்டு மாடுகளை கட்டிப்போடாமல் ரோட்டில் விடுகின்றனர்.



கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமிப்பதோடு, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளை விபத்திற்குள்ளாக்குகின்றன. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக டி.எஸ்.பி., ராஜேஸ் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும். உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி உத்தரவின் பேரில் ஊழியர்கள் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கால்நடை காப்பகத்தில் அடைத்தனர். பின் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X