உதவித்தொகை பெற தாலுகா அலுவலகம் அலையும் முதியோர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
00:54

கமுதி : கமுதி அருகே 60 வயது நிரம்பிய முதியோருக்கு மூன்று மாதங்களாக மாதாந்திர உதவித் தொகை கிடைக்காததால் தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் 1000 ரூபாய் முதியோர் உதவிதொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

கமுதி தாலுகாவில் உள்ள மண்டலமாணிக்கம், எழுவனுார், கூடக்குளம், வலையபூக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட முதியவர்களுக்க மூன்று மாதமாக உதவித் தொகை வழங்கப்படவில்லை. இதனால் கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத முதியோர், வருவாயின்றி, அரசு வழங்கிய மாதாந்திர உதவித்தொகையில் வாழ்ந்தவர்கள், தற்போது உணவுக்காக கையேந்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.



உணவுக்கு வழி இல்லாததால் உதவித் தொகை பெறும் முதியோர் தபால்காரரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பரிதாப நிலை உள்ளது. இந்நிலையில் மண்டலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் கடந்த 10 நாட்களாக, கமுதி தாலுகா அலுவலகத்திற்கு முதியோர் உதவி தொகை பெற அலைந்த வண்ணம் உள்ளனர். அதிகாரிகளிடம் முறையிட வரும் மூதாட்டிகள் தண்ணீர், உணவின்றி தவிக்கின்றனர்.



எனவே ஆதரவற்ற வயதான முதியோர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவி தொகையை மாதந்தோறும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயனாளிகள் வேதனை தெரிவித்தனர்.

மண்டலமாணிக்கம் மூதாட்டி சீதாலெட்சுமி கூறுகையில், 'மாதந்தோறும் உணவுக்கு வழியில்லாமல் அரசு கொடுக்கும் முதியோர் உதவித் தொகையை நம்பி வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் 3 மாதங்களாக வழங்கவில்லை. இதுகுறித்து கமுதி தாலுகா அலுவலகத்தில் முறையிட்டால், அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர், என்றார்.



இதுகுறித்து கமுதி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுரேஷ் கூறுகையில், 'மண்டலமாணிக்கம் தபால் அலுவலகத்தில் 'இன்டர்நெட்' பிரச்னையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளால் மட்டுமே சரி செய்யப்படும். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தபால் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் மண்டலமாணிக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள முதியோருக்கு உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும, என்றார்.


 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X