ராமாபுரம்:ராமாபுரத்தில், பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெறாததால், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், பூத்தப்பேடு பிரதான சாலையில், கோல்டன் தெரு, சில்வர் தெரு ஆகியவை உள்ளன. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக, குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முடிவடையாததால், இன்னும், வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள், சாலையோரம் உள்ள மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுகின்றனர்.
இந்த கழிவுநீர், பூத்தப்பேடு பிரதான சாலை அருகே அடைப்பு ஏற்பட்டு, சாலையில் வழிந்தோடுகிறது.
அடைப்பு காரணமாக கழிவுநீர்,வீடுகளில் தேங்கி விடுகிறது. இதனால், அப்பகுதி மக்
களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.மேலும், கழிவுநீர் சாலையில் தேங்குவதால், வேகமாக செல்லும் வாகனங்களால், பாதசாரிகள் மேல் கழிவுநீர் வீசப்படுகிறது.
இதனால், பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பகுதிமக்கள்மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்த பின், கழிவுநீரை அகற்ற, மின் மோட்டார் அமைத்துள்ளனர். இந்த மின் மோட்டாரும் பல நேரங்களில் செயல்படுவதில்லை. இதனால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.