| விபத்துகளை தவிர்க்க வேகத்தடை வேண்டும் Dinamalar
விபத்துகளை தவிர்க்க வேகத்தடை வேண்டும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மே
2019
01:23

மாதவரம்:நான்கு முனை சாலை சந்திப்பில், விபத்துகளை தவிர்க்க, வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


மாதவரம் ரவுண்டானா மேம்பாலம், 200 அடி சாலை சந்திப்பு, வட சென்னை, தென் சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்திற்கான, நுழைவு வாயிலாகஉள்ளது.

அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலால்,இந்த சந்திப்பில், விபத்துகள் தொடர்கின்றன. போக்குவரத்து போலீசார் இருந்தும், கட்டுப்படுத்த முடியாத நிலைநீடிக்கிறது.

இந்த நிலையில், செங்குன்றம், புழலில் இருந்து மாதவரம்; மணலியில் இருந்து கொளத்துார்; மூலக்கடையில் இருந்து செங்குன்றம்; கொளத்துாரில் இருந்து மணலி என, நான்கு வழி நேரடி சாலையில், இடது, வலது என திரும்பும், எட்டு முனை போக்குவரத்து

நடக்கிறது.

அதில், இலகுரக வாகனங்களை விட கனரக வாகனங்களே அதிகம். மேலும், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை மற்றும் ஆந்திராவிற்கு, தினமும், 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அவற்றின் வருகையால், மேலும் நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ரவுண்டானா பாலத்தின் இருபுறமும் உள்ள, நான்கு வழி அணுகு சாலைகளில் வரும், இரு சக்கர வாகன ஓட்டிகள், சந்திப்பை கடக்கும் போது, விபத்தில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

போக்குவரத்து போலீசாரும், அவ்வப்போது, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு போன்ற கூடுதல் பணிகளுக்கு சென்று விடுகின்றனர்.இதனால், அங்கிருக்கும் குறைந்த எண்ணிக்கை போலீ

சாரால், போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை.

இந்த நிலையில், ரவுண்டானா சந்திப்புக்கு முன், 200 அடி இடைவெளியில், வேகத்தடை அமைத்தால், வாகனங்களை கட்டுப்படுத்தி விபத்து,உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X