அண்ணாசாலை:செயல்படாத சிக்னல் விளக்குகளை, சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால்,
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன.
அண்ணாசாலை - வாலாஜாசாலை சந்திப்பில், போக்குவரத்து துறை சார்பில், சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில், ராயப்பேட்டை நோக்கி செல்லும் திசையில் உள்ள சிக்னலில், சமிக்ஞை விளக்குகள் எரிவது இல்லை. அவற்றை சீரமைக்க கோரி, பலமுறை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இன்னும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அவ்வப்போது வாகன விபத்துகளும் நடக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,பழுதடைந்த சமிக்ஞை விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.