திருமண மண்டபங்கள் தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
01:51

சென்னையில், வாகனம் நிறுத்த வசதி இல்லாத திருமண மண்ட பங்களால், அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, நெடுஞ்சாலைத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னையில், 200 கி.மீ.,க்கும் மேற்பட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைத் துறையின்

பராமரிப்பில் உள்ளன.


இதில், அண்ணாசாலை, ஜி.என்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, உள்வட்டச்சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மவுன்ட் - பூந்த மல்லி நெடுஞ்சாலை உள்ளிட்டவை அடக்கம்.

சென்னையில், நாளுக்கு நாள் வாகனங்களின்

எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வந்து செல்கின்றன.

வரும் காலத்திற்கு ஏற்றபடி, இச்சாலைகளை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம், நெடுஞ்சாலைத் துறைக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையின், பெருநகரம் பிரிவு வாயிலாக, ஒரு மாதம் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், சாலையோர ஆக்கிரமிப்பு, வாகன நிறுத்த வசதி இல்லாத திருமண மண்டபங்கள் தான், போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான காரணம் என, தெரிய வந்துள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில், பிரதான சாலைகளை ஒட்டி, வர்த்தக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை, அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன.

ஆனால், வாகன வசதி இல்லாமல், ஜி.என்.டி., சாலை, உள்வட்டச்சாலை, மவுன்ட் - பூந்தமல்லி உள்ளிட்ட சாலைகளில், அதிகளவில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள், வாகனங்களை, சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

இது, விபத்துகளை ஏற்படுத்துவதுடன், போக்குவரத்து போலீசாருக்கும், தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

வாகனம் நிறுத்த வசதி இல்லாத, திருமண மண்ட பங்களை முறைப்படுத்தினாலே, போக்குவரத்து நெரிசலை, கணிசமாக குறைக்க முடியும்.

இது குறித்து, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X